சூர்யாவின் 24 பட ட்ரைலர் விமர்சனம்..!


சூர்யாவின் 24 பட ட்ரைலர் விமர்சனம்..!

மாறுபட்ட வேடங்களில் சூர்யா நடித்திருக்கும் படம் 24.

விக்ரம்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் சமந்தா நித்யா மேனன், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதன் ட்ரைலரை இன்று இரவு 8 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.

இதுபற்றிய விமர்சனம் இதோ…

இது இரண்டு நிமிடம் 10 நொடிகள் ஓடக்கூடியது.

ட்ரைலரின் ஆரம்பமே ஒரு மிகப்பெரிய எதிர்ப்பார்பை உருவாக்கியுள்ளது.

ஹாப்பி பர்த்டே டூ மீ… என சூர்யா கர்ஜிக்கும்போதே தன்னைத் தானே ஒருவன் எந்தளவுக்கு நேசிப்பான் என்பதை அந்த வார்த்தைகள் சொல்லி விடுகிறது. அதன் பிறகு மின்னல் வேகத்தில் செல்கிறது ட்ரைலர்.

அதிவேகமான டிரெயினில் இருந்து வெளியே வரும் சூர்யா மிக உயரமான பாலத்தில் இருந்து குதிக்கிறார். அதன் பின்னணியில்… ”இப்படி ஒரு வாழ்க்கை என்னால் வாழ முடியாது. நான் இழந்தது எல்லாம் திரும்ப வேண்டும் என்று சூர்யாவின் ஆவேச குரலும் ஒலிக்கிறது.

இடையே அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகளில் தாடி வைத்த சூர்யா தெறிக்க விடுகிறார்.

இதனிடையில் கையில் குழந்தையுடன் இருக்கும் நித்யா மேனனை முத்தமிடுகிறார்.

இதனைத் தொடர்ந்து டைம் மிஷினை பற்றிய கான்செப் இடம் பெறுகிறது. இதனை சூர்யா முயற்சித்து கண்டுபிடிக்கிறார்.

அதன் பின்னர் சமந்தாவுடன் அழகான ரொமான்ஸ் இடம் பெறுகிறது. சூர்யாவின் அம்மா சரண்யாவுக்கு சமந்தாவை மிகவும் பிடித்து விடுகிறது.

சமந்தாவிடம் ஜொள்ளு விடும் சூர்யா மிக அழகாக தெரிகிறார். ஆனால் சமந்தா உள்ளுக்குள் புதைத்து கொண்டு நடிப்பது அருமையாக இருக்கிறது.

டைம் மிஷினை வைத்து சமந்தா தன்னை காதலிப்பதாக கண்டு பிடிக்கிறார் சூர்யா. இதனிடையில் சத்யனும் எப்படிடா இதெல்லாம் என்று கேட்கிறார்..?

இடையில் காலம் என்னும் காதலியோ என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க, வில்லன் சூர்யா இந்த உலகத்தில் உள்ள சாதனை, சரித்திரம் அனைத்தையும் என் காலடியில் கொண்டு வருவேன் என்று எழ முடியாத நிலையிலும் கர்வமாக பேசுகிறார்.

இறுதியில் எல்லாம் காலத்தையும் காட்டும் ஒரு வாட்சுக்காக நடைபெறும் ஒரு வித்தியாசமான போராட்டம்தான் இப்படம் எனத் தெரிகிறது.

நிச்சயம் இது ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான கலவையாக இருக்கும்.