ரஹ்மான் இசையில் சூர்யாவின் ’24’ ஏப்ரல் 8 முதல்…


ரஹ்மான் இசையில் சூர்யாவின் ’24’ ஏப்ரல் 8 முதல்…

நடிகர் சூர்யா தற்போது தயாரித்து நடித்து வரும் படம் ‘மாஸ்’. வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சூர்யாவுடன்  நயன்தாரா, ப்ரணிதா, பிரேம்ஜி, சமுத்திரக்கனி, பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை மே மாதம் வெளியிட இருக்கிறார்கள்.

இப்படத்தை தொடர்ந்து ஏஆர் ரஹ்மான் இசையமைக்க ’24’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா. இப்படத்தில் சமந்தா, சத்யன் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

சிம்பு-த்ரிஷா நடித்த அலை, மாதவன்-நீது சந்திரா நடித்த யாவரும் நலம் உள்ளிட்ட படங்களை இயக்கிய விக்ரம் குமார் இப்படத்தை இயக்கவிருக்கிறார். ஏப்ரல் 8ம் தேதி முதல் இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் துவங்குகிறது.

தற்போது ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கத்தில் ‘36 வயதினிலே’ மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘ஹைக்கூ’ ஆகிய படங்களை சூர்யா தனது ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.