15 வருடங்களுக்கு பிறகு சூர்யாவுடன் இணையும் பிரபல நடிகை!


15 வருடங்களுக்கு பிறகு சூர்யாவுடன் இணையும் பிரபல நடிகை!

கடந்த 2015ஆம் ஆண்டின் இறுதியில் ‘பசங்க 2’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார் சூர்யா. இதனைத் தொடர்ந்து தற்போது ஹரி இயக்கத்தில் ‘எஸ் 3′ படத்தில் நடித்து வருகிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தில் நடிகை ராதிகாவும் இணைந்து இருக்கிறார்.

இது குறித்து ராதிகா தெரிவித்துள்ளதாவது… “மீண்டும் விசாகப்பட்டினம் வந்துள்னேன். ‘சிங்கம் 3’ படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். சூர்யா, உங்களுடன் மீண்டும் நடிப்பது மிக்க மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.

இவர்கள் இதற்கு முன்பே 2000ஆம் ஆண்டு வெளியான ‘உயிரிலே கலந்தது’ படத்தில் அம்மா, பிள்ளையாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.