‘விஜய்யை விட சூர்யா தந்த வலி அதிகம்’ – கௌதம்மேனன்


‘விஜய்யை விட சூர்யா தந்த வலி அதிகம்’ – கௌதம்மேனன்

தமிழ் சினிமாவின் தரத்தை இந்தியளவில் கொண்டு செல்லும் இயக்குனர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த வரிசையில் முக்கியமானவர் இயக்குனர் கௌதம் மேனன்.

தற்போது மீண்டும் சிம்புவுடன் இணைந்து ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். சிம்பு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்க, ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இவர் தன் நாயகர்கள் பற்றி மனம் திறந்துள்ளார். அவர் கூறியதாவது…

“ராஜமௌலி இயக்கிய ‘பாகுபலி’ ஒரு அந்நியமான களம்தான். ஆனால் எல்லா மாநிலத்தவர்களும் ரசிக்கிறார்கள். அப்படித்தான் என்னுடைய யோஹனும் இருந்திருக்கும். ஆனால் அப்படத்தில் விஜய் நடிக்க மறுத்து விட்டார். அவருக்கு என்னை பற்றி தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை விஜய் என் படங்களை பார்க்காமல் இருந்திருக்கலாம். எனவே, என் வேலை பற்றி அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் என்னுடன் பணிபுரிந்த சூர்யா ஒரு முறை மறுத்தபோது அது என்னை பாதித்தது. நீ எப்படி செய்வாய் என்று எனக்கு தெரியும், நம்பிக்கை உள்ளது. படம் சேர்ந்து பண்ணலாம் எனக் கூறியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனால் நண்பர் என்றவர் என் இயக்கத்தில் நடிக்காமல் விலகியது எனக்கு இன்னும் வலிக்கிறது” என்றார் கௌதம் மேனன்.