‘அதையெல்லாம் நம்பாதீங்க; ப்ளீஸ்…’ மீண்டும் சர்ச்சையில் சூர்யா..!


‘அதையெல்லாம் நம்பாதீங்க; ப்ளீஸ்…’ மீண்டும் சர்ச்சையில் சூர்யா..!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் சூர்யா வாக்களிக்கவில்லை.

ஆனால் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு விளம்பரங்களில் அவர் கேட்டுக் கொண்டார்.

எனவே, இதனையடுத்து அவருக்கு, கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார்.

மலேசியாவில் நடைபெறவுள்ள ஒரு தமிழ் அமைப்பைச் சார்ந்த நிகழ்ச்சிக்கு சூர்யா லட்சணக்கனக்கான பணத்தை பெற்றுக் கொண்டதாக கூறப்பட்டது.

ஆனால் இதை சூர்யா மறுத்துள்ளார். இது போன்ற செய்திகளை ரசிகர்கள் நம்பவேண்டாம். புறக்கணிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.