ரஜினிகாந்த் வாய்ஸ்க்கே டப்பிங் கொடுத்த சூர்யா…!


ரஜினிகாந்த் வாய்ஸ்க்கே டப்பிங் கொடுத்த சூர்யா…!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பன்ச் வசனங்கள் பிரபலமானது.

தமிழ் சினிமாவில் பன்ச் டயலாக் என்றால் அது ரஜினிதான் என்றளவில் புகழ்பெற்றார். மேலும் பொது வாழ்விலும் இவரது மேடை பேச்சுக்கள் மற்றும் வாய்ஸ் பிரபலமானது.

இந்நிலையில் முத்து படத்தில் இவர் பேசும் “இந்த தும்மல்.. இருமல்.. எனத் தொடங்கி… எச்ச்ச்ச.. எச்ச்ச.. கச்ச்ச்ச” என்று முடிக்கும் டயலாக் படுபிரபலம்.

தற்போது இந்த டயலாக்குக்கு சூர்யா டப்ஸ்மேஷ் (Dubsmash) செய்து, அந்த வீடியோவை தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது அச்சு அசல் சூர்யாவே பேசுவது போல உள்ளது. இதனைக் கண்ட பலரும் சூர்யாவை பாராட்டி வருகின்றனர்.

மேலும் அதில் ஒவ்வொரு குடிமகனும் வாக்களிக்க வேண்டும் என்ற அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார் சூர்யா.