மனம் தமிழ் ரீமேக்கில் அப்பா, தம்பியுடன் நடிக்கிறாரா சூர்யா..?


மனம் தமிழ் ரீமேக்கில் அப்பா, தம்பியுடன் நடிக்கிறாரா சூர்யா..?

நட்சத்திர குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், பெரும்பாலும் அவர்கள் இணைந்து நடிப்பதில்லை.

அதற்கான வாய்ப்புகள் சில நட்சத்திரங்களுக்கு அமையாது.

நீண்ட நாட்களுக்கு பிறகு கமல்-ஸ்திருக்கு தற்போதுதான் அமைந்துள்ளது.

இந்நிலையில் சூர்யா, கார்த்தி இணைந்து நடிப்பது எப்போது? என்ற கேள்வி பல நாட்களாக இருந்துவருகிறது.

சிங்கம் 3 (எஸ் 3) படத்தில் இணைந்து நடிப்பார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் இத்தகவலை கார்த்தி மறுத்துதிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மனம் என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தந்தை சிவக்குமாருடன் சூர்யா, கார்த்தி இணைந்து நடிக்கக்கூடும் என கூறப்பட்டது.

இதுகுறித்து சூர்யா கூறியதாவது…

அப்பா, தம்பியுடன் நடிக்கத் தயாராக இருக்கிறேன். ஏற்கெனவே மனம் ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு வந்தது.

ஆனால் ரீமேக்கில் நடிக்க விருப்பமில்லை. எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அது இருக்க வேண்டும். எனவே புது மாதிரியான கதையை தேடிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.