சூர்யாவின் எண்ணங்களும்… தலைப்பு எண்களும்…!


சூர்யாவின் எண்ணங்களும்… தலைப்பு எண்களும்…!

நாம் பிறந்த நிமிடம் முதல் செண்டிமென்ட்டாக நல்ல நேரம் பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள் நம் பெற்றோர்கள். எனவே சில நேரங்களில் நாமும் அவ்வாறே ஒவ்வொரு விஷயத்தை தொடங்கும் போதும் சென்டிமெண்ட்டாக நல்ல நேரத்தை பார்த்து வருகிறோம்.

நாமே இப்படி என்றால் கோடிகளில் புரளும் திரையுலகினர் நல்ல நேரம், நியூமராலஜி, சென்டிமெண்ட் பார்க்காமல் இருப்பார்களா? இவர்களில் தற்போது நடிகர் சூர்யாவும் இந்த சென்டிமெண்ட்டி வலையில் வீழ்ந்து விட்டார் என்றே தோன்றுகிறது.

சூர்யாவின் சமீபத்திய படங்களை பார்த்தாலே இது உங்களுக்கு தானாக தெரியும். 1997ஆம் ஆண்டு முதல் இவர் நடித்து வந்தாலும் அண்மை காலமாக படங்களை தயாரித்து வருகிறார்.

இவர் தயாரித்து வரும் படங்களின் தலைப்புகளில் எண்களே பிரதானமாக தெரிகிறது. ‘36 வயதினிலே’, ‘பசங்க 2’, ‘24’ ஆகிய படங்களை தயாரித்திருக்கிறார். மேலும் இதுநாள் வரை ‘சிங்கம் 3’ என்று அழைக்கப்படவிருந்த படத்திற்கும் தற்போது ‘S3’ என்று பெயரிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

சூர்யாவின் சமீபத்திய எண்ணங்கள் எண்களை சார்ந்தே உள்ளது இங்கே கவனித்தக்கது.