ரஜினி, அஜித் வழியில் முதன்முறையாக சூர்யா!


ரஜினி, அஜித் வழியில் முதன்முறையாக சூர்யா!

‘அஞ்சான்’ மற்றும் ‘மாஸ்’ படங்களுக்கு பிறகு தன் படங்களை மிகவும் கவனத்துடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சூர்யா. இந்த இரண்டு படங்கள் கற்றுக்கொடுத்த பாடங்களை அவரும் அவரது ரசிகர்களும் எளிதில் மறக்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, சூர்யா ஒரு வெற்றியை கொடுக்க வேண்டிய நிலையில் உழைத்து வருகிறார்.

இந்நிலையில் ‘எந்திரன்’ படத்தில் ரஜினி இருவேடங்களை ஏற்றிருப்பார். அதில் ஹீரோ மற்றும் வில்லன் என இருவேடம் ஏற்று அசத்தியிருப்பார். இதுபோலவே ‘வாலி’ படத்தில் அஜித்தும் இருவேடமேற்று அசத்தியிருப்பார். எனவே, இவர்களைப் போல ‘24’ படத்தில் இதுவரை ஏற்காத வில்லன் வேடத்தை சூர்யாவும் ஏற்றுள்ளார். இப்படத்தில் இருவேடமேற்று ஹீரோ மற்றும் வில்லனாக நடிக்கிறாராம். இதனால் படத்திற்கு நிறைய கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் சூர்யாவுடன் சமந்தா, நித்யாமேனன், சத்யன், சரண்யா பொன்வண்ணன், அஜய், கிரிஷ் கர்னாட், மோகன் ராமன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க விக்ரம்குமார் இயக்கி வருகிறார். சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரித்து வருகிறார்.