சூர்யாவின் உள்ளங்கையில் மறைந்திருக்கும் ரகசியம்!


சூர்யாவின் உள்ளங்கையில் மறைந்திருக்கும் ரகசியம்!

படங்கள் வெற்றியடைந்தாலும் தோல்வியடைந்தாலும் தன்னை மட்டுமே பாதிக்கட்டும் என்ற நினைப்பில் நம்ம ஹீரோக்கள் படம் தயாரித்து வருகிறார்கள். (ஒருவேளை மத்த படத்துல நடிச்சா சம்பளம் கம்மியோ?)

இப்போ இந்த வரிசையில் விஷால், தனுஷ் வரிசையில் சூர்யாவும் இணைந்துள்ளார்.

ஆனால் தனுஷ், சூர்யா ஆகியோர் கொஞ்சம் வித்தியாசமான படங்களை தயாரித்து வருகின்றனர். தாங்கள் நடிக்காத படமாக இருந்தாலும் சமூகம் சார்ந்த நல்ல கருத்துள்ள படங்களைக் கொடுத்து வருகின்றனர்.

சூர்யா, தன் தயாரிப்பு படமான ‘36 வயதினிலே’ என்ற பெண்களுக்கான படத்தை தந்தார். இப்போது டிசம்பர் 4ஆம் தேதி வெளியாகவுள்ள ‘பசங்க 2’ படத்தை குழந்தைகளுக்கானதாகத் தரவிருக்கிறார்.

மேலும் சூர்யா தனது குடும்பத்திற்கும் அவருக்கும் உள்ள ஆழமான உறவை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.

அண்மையில் ஒரு விழாவில் பங்கேற்ற சூர்யா தனது கையில் மருதாணி இட்டுள்ளார்.

அதில் தன் மனைவி ஜோதிகா, குழந்தைகள் தியா தேவ் ஆகிய பெயர்களின் முதல் எழுத்துக்களை வரைந்திருந்தார். இதனால், சந்தோஷம், கஷ்டம் எது வந்தாலும் அடிக்கடி தன் கைகளையே பார்த்தபடியே இருக்கிறாராம் சூர்யா.