கர்நாடகாவில் ரஜினியை நெருங்கும் சூர்யா!


கர்நாடகாவில் ரஜினியை நெருங்கும் சூர்யா!

‘மாஸ்’ படத்தை தொடர்ந்து விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘24’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது இப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் சூர்யாவுடன் சமந்தா, நித்யா மேனன், டோலிவுட் நடிகர் அஜய், சத்யன், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இப்படத்தை தனது 2டி நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார் சூர்யா.

இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு மொழிமாற்ற உரிமையை நடிகர் நிதின் என்பவர் குளோபல் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளார். மேலும் கேரள ரிலீஸ் உரிமையை சொப்னம் பிலிம்ஸ்‘ நிறுவனம் பெற்றுள்ளதாம்.

இதனைத் தொடர்ந்து கர்நாடக வெளியீட்டு உரிமையை பிரபல ப்ருண்டா அஸோஸியேட் நிறுவனம் ரூ. 6.5 கோடி கொடுத்து பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு கர்நாடகாவில் ரஜினி படங்கள் மட்டுமே இதுபோன்ற அதிக விலைக்கு விற்கப்படுமாம். தற்போது சூர்யா படங்கள் அதிக தொகைக்கு விற்கப்பட்டிருப்பது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.