‘கமல்ஹாசனுக்கு அடுத்து சூர்யாதான்….’ தனஞ்செயன் பேச்சு..!


‘கமல்ஹாசனுக்கு அடுத்து சூர்யாதான்….’ தனஞ்செயன் பேச்சு..!

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் 24. இதில் சூர்யாவுடன் சமந்தா, நித்யா மேனன், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சூர்யா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இவ்விழாவில் தனஞ்செயன் பேசியதாவது…

“தமிழ் சினிமாவில் புதுபுது தொழில்நுட்பங்கள் அறிமுகமாகிறது. அதில் பலவற்றை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார்.

அதுபோல், விதவிதமான புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருபவரும் அவரே. அந்த வகையில் கமலுக்கு அடுத்து, புதிய முயற்சிகளை சூர்யா செய்து வருகிறார். அவருக்கு வாழ்த்துக்கள்” என்று பேசினார்.

இயக்குனர் விக்ரம்குமார் பேசியதாவது…

“இதுபோன்ற ஒரு வித்தியாசமான முயற்சியை சூர்யா இல்லாமல் என்னால் செய்திருக்க முடியாது. அவருடைய ஆற்றலே இப்படத்திற்கு உறுதுணையாக இருந்தது.

இப்படத்தில் எனக்கு கிடைத்த அனைவரும் அருமையான கலைஞர்கள். எனவே அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றியை கூறிக்கொள்கிறேன்” என்றார்.