‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…’ புலம்பும் சூர்யா!


‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…’ புலம்பும் சூர்யா!

‘அஞ்சான்’ மற்றும் ‘மாஸ்’ என இரு தோல்வி படங்களை கொடுத்தமையால் பெரும் டென்ஷனில் இருக்கிறார் சூர்யா. எனவே தன் அடுத்த படத்தை யாரும் எதிர்பாராத வகையில் ஒரு வெற்றி படமாக கொடுக்க போராடி வருகிறார்.

தற்போது ‘24’ என்ற படத்தில் சமந்தா, நித்யா மேனன் மற்றும் டோலிவுட் நடிகர் அஜய் ஆகியோருடன் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இப்படத்தை விக்ரம்குமார் இயக்கியுள்ளார். தனது 2டி நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார் சூர்யா. இப்படத்தின் தெலுங்கு மொழிமாற்ற உரிமையை நடிகர் நிதின் குளோபல் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளாராம்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனால் சூர்யா கடும் டென்ஷனில் உள்ளாராம். புகைப்படங்களை யாரும் பகிரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார் சூர்யா.