மனைவிக்காக ‘மாஸ்’ படத்தை தள்ளி வைத்த சூர்யா!


மனைவிக்காக ‘மாஸ்’ படத்தை தள்ளி வைத்த சூர்யா!

மே மாதம் வந்தால் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். விடுமுறைக்கு வெளியூர் போகிறோமோ இல்லையோ நிச்சயமாக வாரம் 2 (அ) 3 படங்களையாவது பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்து விடுவார்கள். இதனால் மே மாதம் ஒவ்வொரு வாரமும் வெளியீட்டுக்கு படங்கள்  வரிசை கட்டிக்கொண்டு நிற்கும்.

இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு ஜோதிகா ரீஎன்ட்ரி ஆகும் ’36 வயதினிலே’ படம் மே 8ஆம் தேதி வெளியாகவிருந்தது. இப்படத்தை சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் சார்பில் தயாரித்து இருக்கிறார். இப்படத்தில் இடம் பெற்ற “வாடி ராசாத்தி” பாடலுக்கு மீண்டும் படப்பிடிப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது. பாடலை இணைக்கும் பணி நிறைவு பெறாமல் போனதால் மே 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

அதே நாளில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘மாஸ்’ படமும் வெளியாகும் என முதலில் கூறப்பட்டது. தற்போது ‘மாஸ்’ படத்தின் இசை மே 8ஆம் தேதி வெளியாகவிருப்பதால் இப்படத்தின் ரிலீஸ் தேதியை மே 29க்கு தள்ளி வைத்துள்ளனர்.

மனைவி ஜோதிகாவுக்காக சூர்யா, ‘மாஸ்’ படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதியை தள்ளிக் கொண்டே போகிறாரா? என்று திரையுலகினரும் ரசிகர்களும் குழம்பிபோய் உள்ளனர்.