அடுத்த வேட்டைக்கு தயாரான ‘சிங்கம்’ சூர்யா!


அடுத்த வேட்டைக்கு தயாரான ‘சிங்கம்’ சூர்யா!

மிகவும் பரபரப்பாக போய்க் கொண்டிருந்த சூர்யாவின் ஹிட் வரிசையில் ‘அஞ்சான்’ மற்றும் ‘மாஸ்’ படங்கள் வந்து தோல்வியை தழுவியது. இதனால் தற்போது நடித்து வரும் படங்களை மிக கவனமுடன் தேர்ந்தெடுத்து வருகிறார். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்து வந்த ‘பசங்க 2’ படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விக்ரம்குமார் இயக்கத்தில் இவர் நடித்து வந்த ’24’ படத்தின் படப்பிடிப்பும்  இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சூர்யாவுடன் சமந்தா, நித்யாமேனன், சத்யன், சரண்யா பொன்வண்ணன், அஜய், கிரிஷ் கர்னாட், மோகன் ராமன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டது. பாடல் காட்சிகளை போலந்து நாட்டில் படமாக்கியுள்ளனர். இப்படத்தை 2016ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியிடவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஹரி இயக்கும் ‘சிங்கம் 3′ படப்பிடிப்பில்  விரைவில் கலந்து கொள்ளவிருக்கிறார் சூர்யா. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.