பிறந்தநாள் இல்லனா சுதந்திர தினம்… சூர்யாவின் ‘எஸ் 3’ ஆப்ரேஷன்..!


பிறந்தநாள் இல்லனா சுதந்திர தினம்… சூர்யாவின் ‘எஸ் 3’ ஆப்ரேஷன்..!

சூர்யா நடித்துள்ள 24 படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து ஹரி இயக்கி வரும் ‘எஸ் 3’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இவருடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், விவேக், ராதாரவி, நாசர், ராதிகா சரத்குமார், சுமித்ரா, யுவராணி, சூரி, ரோபா சங்கர், சாம்ஸ், க்ரிஷ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ப்ரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை சூர்யாவின் பிறந்த நாள் (ஜுலை 23) அன்று வெளியிட இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் அதற்குள் பணிகள் முடிவடையாது என்பதால் இதில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது ஆகஸ்ட் 15ஆம் சுதந்திர தினத்தன்று வெளியிடவிருப்பதாக கூறப்படுகிறது.