‘என்னைப் போல் நடிக்கத் தெரியாதவர் இல்லையே அவர்…’ சூர்யா பரபரப்பு பேச்சு.!


‘என்னைப் போல் நடிக்கத் தெரியாதவர் இல்லையே அவர்…’ சூர்யா பரபரப்பு பேச்சு.!

இஷான் புரொடக்ஷன் சார்பில் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் தயாரிக்கும் படம் மீன் குழம்பும் மண் பானையும்.

இதில், பிரபு, காளிதாஸ், ஆஷ்னா ஷாவேரி, பூஜா குமார், ஊர்வசி, எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதில் கமல் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக சூர்யா கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது…

“சிவாஜி குடும்பத்தாரின் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் சந்தோஷமாக இருக்கிறது.

நேருக்கு நேர் படத்தில் நான் அறிமுகம் ஆன போது, எனக்கு சுத்தமாக நடிக்க தெரியாது. அதன்பிறகு தான் எல்லாம் கற்றுக் கொண்டேன்.

ஆனால் இப்படத்தின் நாயகன் காளிதாஸ் என்னைப் போல் கிடையாது. நடிக்க வருவதற்கு முன்பே எல்லாவற்றையும் கற்றுக் கொண்டுள்ளார்.

சின்ன குழந்தையாக இருக்கும்போது நடிப்புக்காக தேசிய விருதை வென்றவர் அவர். பெரிய நடிகராக வளர அவரை வாழ்த்துகிறேன்” என்று பேசினார் சூர்யா.