அஜித், விஜய்க்கு நிகராக சூர்யாவுக்கு கிடைத்த ஓப்பனிங்..!


அஜித், விஜய்க்கு நிகராக சூர்யாவுக்கு கிடைத்த ஓப்பனிங்..!

அஞ்சான் மற்றும் மாஸ் என தொடர்ச்சியாக இரண்டு படங்கள் சூர்யாவுக்கு சரியாக போகவில்லை. எனவே இன்று வெளியாகியுள்ள 24 படத்திற்கும் இதே நிலைமைதான் இருக்கும் என சிலர் எதிர்பாரத்தனர்.

ஆனால் படத்தை பார்த்த விமர்சகர்களும் ரசிகர்களும் படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்களையே கொடுத்து வருகின்றனர்.

ஒரு ட்ராவல் டைம் கதையை போராடிக்காமல் இயக்குனர் விக்ரம் குமார் வழங்கியிருக்கிறார். மேலும் மூன்று வேடங்களுக்கும் சூர்யா தன் அர்ப்பணிப்பை கொட்டி இருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தை வரவேற்க சூர்யா ரசிகர்கள் மிகப்பெரிய கட்அவுட்டை உருவாக்கியுள்ளனர்.

அதிலும் அவர்கள் மிகவும் எதிர்பார்த்த வில்லன் ஆத்ரேயா கட் அவுட்டை மிகப்பெரிய அளவில் வைத்து, விஜய், அஜித் படங்களுக்கு நிகரான ஓப்பனிங்கை கொடுத்துள்ளனர்.