தென்னிந்தியாவை கலக்கும் சூர்யாவின் ‘24’ விநியோகம்!


தென்னிந்தியாவை கலக்கும் சூர்யாவின் ‘24’ விநியோகம்!

பாண்டிராஜ் இயக்கிய ‘பசங்க 2’ படத்தை தொடர்ந்து தற்போது ‘24’ என்ற படத்தில் நடித்துள்ளார் சூர்யா. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ப்படத்தின் வியாபாரமும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதில் சூர்யாவுடன் சமந்தா, நித்யா மேனன், டோலிவுட் நடிகர் அஜய், சத்யன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இப்படத்தை விக்ரம்குமார் இயக்கியுள்ளார்.

தனது 2டி நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார் சூர்யா. இப்படத்தின் தெலுங்கு மொழிமாற்ற உரிமையை நடிகர் நிதின் என்பவர் குளோபல் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளாராம்.

இதனைத் தொடர்ந்து கேரள ரிலீஸ் உரிமையை சொப்னம் பிலிம்ஸ்‘ நிறுவனம் பெற்றுள்ளது. மேலும் கன்னட ரிலீஸ் உரிமையை பிருண்டா அசோசியேட்ஸ் (Brunda Associates) நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தை பொங்கல் விருந்தாக தன் ரசிகர்களுக்கு தரவிருக்கிறாராம் சூர்யா.