ஷாலினி அஜித், சங்கீதா விஜய் பற்றி ஜோதிகா கணவர்..!


ஷாலினி அஜித், சங்கீதா விஜய் பற்றி ஜோதிகா கணவர்..!

சினிமாவுக்கு வருவதற்கு முன்பே விஜய்யும் சூர்யாவும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

நேருக்கு நேர், ப்ரெண்ட்ஸ் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில் விஜய்யுடன் தன் இன்றைய நட்பு குறித்து, சமீபத்தில் பேட்டியளித்துள்ளார் சூர்யா. அப்போது அவர் கூறியதாவது….

‘எங்கள் நட்பு எப்போதும் நெருக்கமாக உள்ளது. நான் விஜய் படங்களை பார்த்தவுடன் அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவிப்பேன்.

அதுபோல நாங்கள் இருவரும் எங்கள் காலேஜ் ப்ரெண்ட்ஸ் உடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறோம்.

எங்களைப் போலவே சங்கீதா, ஷாலினி மற்றும் ஜோதிகா ஆகியோரும் நெருக்கமான நட்புடன் இருக்கிறார்கள்” என்றார் சூர்யா.