விஷால், கார்த்தி, ஜெயம் ரவிக்கு வில்லனாகும் சூர்யா..!


விஷால், கார்த்தி, ஜெயம் ரவிக்கு வில்லனாகும் சூர்யா..!

நடிகர் சங்கத் தேர்தல் மற்றும் நட்சத்திர கிரிக்கெட் உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கு இளைய தலைமுறை நடிகர்கள் ஒன்று சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

மேலும் நடிகர் சங்க கட்டிட நிதிக்காக பல நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.

இந்தபடத்தில் முன்பு விஷால் கார்த்தி மட்டும் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது மற்ற கலைஞர்களும் தங்கள் பங்கும் இருக்க வேண்டும் என்று முன்வந்துள்ளனர்.

இதில் ஜெயம் ரவி, ஜீவா மற்றும் ஆர்யா ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் சூர்யா வில்லன் வேடத்தில் நடிக்கலாம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது. 24 படத்திலும் சூர்யா வில்லன் வேடம் ஏற்றுள்ளது தாங்கள் அறிந்ததே.

இந்த புதிய படத்தின் இயக்குனர் மற்றும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளிவரும் எனத் தெரிகிறது.