‘மாஸ்’ படத்தின் லாஸை ஈடுகட்டும் சூர்யா!


‘மாஸ்’ படத்தின் லாஸை ஈடுகட்டும் சூர்யா!

சூர்யா தன் சினிமா கேரியரில் 30 படங்களை கடந்து விட்டார். இதில் இவரின் மறக்க முடியாத படங்களாக ‘நந்தா’, ‘ப்ரண்ட்ஸ்’, ‘பிதாமகன்’, ‘கஜினி’, ‘காக்க காக்க’, ‘அயன்’, ‘சிங்கம்’ என பல படங்களை சொல்லலாம். இவை அனைத்தும் மாபெரும் வெற்றி படங்களாக அமைந்து சூர்யாவை நட்சத்திர அந்தஸ்தில் அமர வைத்தது.

அதே சமயத்தில் லிங்குசாமி இயக்கிய ‘அஞ்சான்’ பட தோல்வியால் அதுவும் சூர்யாவின் மறக்கமுடியாத படமாக ஆனது. இப்படத்தின் தோல்வியில் இருந்து மீள வெங்கட்பிரபுவுடன் இணைந்து ‘மாஸ்’ படத்தை கொடுத்தார். ஆனால் அதுவும் அவருக்கு பெரும் பாடத்தை கொடுத்தது. இப்படத்தை க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பாக ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார்.

இந்நிலையில் சூர்யா தயாரித்து நடித்து வரும் ‘24’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ஞானவேல் ராஜா இப்படத்தை அடுத்த வருடம் பொங்கல் தினத்தன்று திரைக்கு கொண்டுவரவிருக்கிறார். எனவே, ‘மாஸ்’ படத்தினால் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை தொடர்ந்து ‘24’ படத்தை குறைந்த விலைக்கு விற்க முடிவு செய்துள்ளார்களாம்.