முதன்முறையாக சூர்யாவுடன் மோதும் சிவகார்த்திகேயன்!


முதன்முறையாக சூர்யாவுடன் மோதும் சிவகார்த்திகேயன்!

‘மாஸ்’ படத்திற்கு சூர்யா நடித்து எந்தவொரு படமும் வெளியாகவில்லை. இதனிடையில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகிய ‘பசங்க 2’ படம் வெளியாகாமல் தாமதமாகி கொண்டே இருந்தது.

தற்போது இப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் உறுதிசெய்துள்ளனர். வருகிற டிசம்பர் 4ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. சூர்யா தயாரித்துள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா வெளியிடுகிறார். இப்படத்தில் சூர்யாவுடன் அமலாபால், பிந்துமாதவி, கார்த்திக் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் வெகுநாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த சிவகார்த்திகேயனின் ‘ரஜினிமுருகன்’ படத்திற்கு விடிவு காலம் பிறந்துள்ளது. இப்படமும் டிசம்பர் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாம்.

பொன்ராம் இயக்கியுள்ள ‘ரஜினி முருகன்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பாக லிங்குசாமி தயாரித்துள்ளார். இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் பல மாதங்களுக்கு முன்பே வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது.

இந்த இரு படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் அன்றைய தினம் தமிழக ரசிகர்களுக்கு ஒரு திருவிழா காத்திருக்கிறது.