‘நீங்க ஓட்டு போடுங்க… ஸாரி, என்னால முடியல..’ – சூர்யா..!


‘நீங்க ஓட்டு போடுங்க… ஸாரி, என்னால முடியல..’ – சூர்யா..!

இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் 100 சதவிகித வாக்குகள் பதிவாக வேண்டும் என தேர்தல் ஆணையம் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை பலரும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதில் நடிகர் சூர்யாவும் ஒருவர்.

ஆனால் தற்போது தன்னால் ஓட்டளிக்க முடியாது எனவும், அதற்காகதான் மன்னிப்பு கேட்பதாகவும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் சூர்யா.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது…

” இதுவரை நடைபெற்ற எல்லா தேர்தலிலும் முறையாக வாக்களித்துள்ளேன். ஆனால் இம்முறை அது இயலாமல் போய்விட்டது.

தற்போது வெளிநாட்டில் இருக்கிறேன். தேர்தலுக்கு முதல்நாளே சென்னைக்கு வந்துவிட திட்டமிட்டு இருந்தேன். ஆனால் திட்டமிட்டபடி வர இயலவில்லை.

அஞ்சல் மூலம் அல்லது இணையம் மூலம் வாக்களிக்க முடிவு செய்து முயற்சி செய்தேன். ஆனால் சட்டப்பூர்வமான வழிகள் இல்லை.

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று உங்களிடம் வேண்டுகோள் வைத்துவிட்டு என்னால் செய்ய முடியவில்லை.

எனவே, மனப்பூர்வமான மன்னிப்பை அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.

என்னை புரிந்து கொள்ள பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு அந்த கடிதத்தில் சூர்யா தெரிவித்துள்ளார்.