விஜய்-விக்ரமை தொடர்ந்து அஜித்துடன் இணையும் சூர்யா.!


விஜய்-விக்ரமை தொடர்ந்து அஜித்துடன் இணையும் சூர்யா.!

தன் முதல் படமான நேருக்கு நேர் படத்தில் விஜய்யுடன் நடித்தவர் சூர்யா. இதன் பின்னர் விக்ரமுடன் பிதாமகன் படத்திலும் இணைந்து நடித்துள்ளார்.

அதுபோல் ராஜாவின் பார்வையிலே படத்தில் விஜய்யுடனும் உல்லாசம் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்தவர் அஜித்.

ஆனால், அஜித் மற்றும் சூர்யா இதுவரை இணைந்து நடிக்கவில்லை. தற்போது அதற்கான தன் ஆவலை வெளிப்படுத்தியுள்ளார் சூர்யா.

இந்நிலையில், தான் பிரம்மாண்டமாக தயாரித்து நடித்துள்ள, 24 படத்தின் சிறப்பு காட்சியை காண அமெரிக்கா சென்றுள்ளார் சூர்யா.

அப்போது அங்குள்ள ரசிகர்கள் அஜித்துடன் இணைவது எப்போது என்று கேட்டுள்ளார்கள். “அஜித் ஓகே சொன்னா உடனே ரெடிதான்” என்று சூர்யா தெரிவித்தார்.