ஐ லவ் ‘தனி ஒருவன்’; ட்விட்டரில் வாழ்த்திய சூர்யா!


ஐ லவ் ‘தனி ஒருவன்’; ட்விட்டரில் வாழ்த்திய சூர்யா!

‘பாகுபலி’ வெளியாகி எப்படி ஒரு அலையை ஏற்படுத்தியதோ? அதுபோல ஒரு அலை தற்போது ‘தனி ஒருவன்’ படத்திற்கும் தமிழகத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தை பார்த்து சிலிர்த்த ஒவ்வொருவரும் இப்படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

பாராட்டில் மட்டுமல்ல வசூலிலும் நான்தான் நம்பர் 1 என தனித்து ஒருவனாக வீரநடை போட்டு வருகிறான். இந்நிலையில் இப்படத்தை சமீபத்தில் பார்த்த சூர்யா தன் பாராட்டுக்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது…

“ஐ லவ் ‘தனி ஒருவன்’. இதான் முறையான வெற்றி. ஒரு ஒட்டு மொத்த குழுவின் உழைப்பை கொட்டினால் இப்படியான வெற்றி நம்மை தேடி வரும். ஒரு அருமையான திரைப்படத்தை பார்த்தேன். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்” என்றார். நடிகர் கணேஷ் வெங்கட்ராம் மற்றும் வசனகர்த்தா சுபா ஆகியோர் தங்கள் நன்றியினை சூர்யாவுக்கு தெரிவித்துள்ளனர்.

எக்ஸ்ட்ரா டிப்ஸ் : இந்நிலையில் சிரஞ்சீவியின் மகனும் முன்னணி நடிகருமான ராம்சரண் ‘தனி ஒருவன்’ தெலுங்கு ரீமேக்கில் நடிக்க இருக்கிறாராம். இப்படத்தை மோகன் ராஜாவே இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.