‘24’ படக்குழுவினருடன் புனேவில் நடிகர் சூர்யா!


‘24’ படக்குழுவினருடன் புனேவில் நடிகர் சூர்யா!

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘பசங்க 2’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அரோல் கரோலி இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் குழந்தைகள் மற்றும் இல்லத்தரசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தன் அடுத்த படத்தில் ஆர்வம் காட்டி வருகிறார் சூர்யா. விக்ரம் குமார் இயக்கும் ‘24’ படத்தில் நடித்து வரும் சூர்யா தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்புக்காக புனே சென்றுள்ளார். தொடர்ந்து பத்து நாட்கள் வரை இதன் படப்பிடிப்பு அங்கு நடைபெற்று பின்பு நிறைவு பெறவுள்ளது. அதன்பின்னர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்கவுள்ளனர்.

இப்படத்தில் சூர்யாவுடன் சமந்தா, நித்யா மேனன், டோலிவுட் நடிகர் அஜய், சத்யன், சரண்யா பொன்வண்ணன், கிரிஷ் கர்னாட், மோகன் ராமன், ஆகியோரும் நடித்துள்ளனர். கிரண் தியோஹன்ஸ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சூர்யா தனது 2டி நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது.