விஜய்யுடன் மோத தயாராகும் சூர்யா – பவன்கல்யாண்.!


விஜய்யுடன் மோத தயாராகும் சூர்யா – பவன்கல்யாண்.!

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களே இந்திய திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதிலும் தென்னிந்தியளவில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.

ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ் ஆகியோரது படங்களுக்கு ஆந்திராவிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

அதுபோல் பிரபல தெலுங்கு நட்சத்திரங்கள், ராம் சரண், அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, ஜீனியர் என்டிஆர், பவன் கல்யாண், பிரபாஸ், ராணா ஆகியோரது படங்களுக்கு சமீபகாலமாக தமிழகத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் பவன் கல்யாண் நடித்துள்ள ‘சர்தார் கப்பார் சிங் 2′ படத்தை தமிழில் டப் செய்து வெளியிட இருக்கிறார்களாம். பவன் கல்யாணுடன் காஜல் அகர்வால் நடித்துள்ள இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசையை வருகிற மார்ச். 20ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள். அன்றைய தினத்தில்தான் விஜய்யின் தெறி இசையும் வெளியாகிறது.

அதுபோல் தெறி படம் வெளியாகும் நாளில் சூர்யாவின் ‘24’ படம் வெளியாகும் எனவும் கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.