சூர்யாவின் ‘24’ தாமதம்… இளைய தளபதிதான் காரணமா..?


சூர்யாவின் ‘24’ தாமதம்… இளைய தளபதிதான் காரணமா..?

விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 24 படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான காலம் என் காதலி என்ற சிங்கிள் ட்ராக் மற்றும் டீகர் ஆகியவை ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

இந்நிலையில் மார்ச் மாத இறுதியில் இப்படத்தின் பாடல்களும் படம் ஏப்ரல் 14 அன்று ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது.

ஆனால் தொழில்நுட்ப காரணங்களின் தாமத்தால் பாடல்களை ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் வெளியிடவிருக்கிறார்களாம்.

மேலும் இளையதளபதியுடன் மோதினால் வசூல் பாதிக்கும் என்பதால் இந்த முடிவுக்கு 24 படக்குழுவினர் வந்துள்ளதாகவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.