கேரளாவில் விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் சூர்யா…!


கேரளாவில் விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் சூர்யா…!

தமிழகத்தை போலவே கேரளாவிலும் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். இவரது தெறி படம் வெளியான சமயத்தில் கேரளாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் கூட வெளியாகவில்லையாம்.

இந்நிலையில் சூர்யா, 3 வேடங்களில் நடித்துள்ள 24 படம் இன்று உலகமெங்கும் 2000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது.

கேரளாவின் விநியோக உரிமையை பெற்றுள்ள சோபானம் ஃபிலிம்ஸ் நிறுவனம் 200க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படத்தை திரையிடுகிறது.
ஏற்கெனவே, தமிழகத்தை அடுத்து ஆந்திராவில் சூர்யாவுக்கு நல்ல மார்கெட் உள்ளது.

தற்போது கேரளாவில் விஜய்க்கு போட்டியாக இவர் களம் இறங்குகிறார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.