சூர்யாவின் 24… பத்து நாட்கள் வசூல் சாதனையும் சோதனையும்..!


சூர்யாவின் 24… பத்து நாட்கள் வசூல் சாதனையும் சோதனையும்..!

சூர்யா மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து 3 வேடங்களில் நடித்து வெளியான படம் 24.

விக்ரம் கே. குமார் இயக்கிய இப்படத்தில் சமந்தா, எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

கடந்த மே 6ஆம் தேதி வெளியான இப்படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வசூல் மழை பெய்து வருகிறது.

படம் வெளியாகி 10 நாட்களை கடந்துள்ள நிலையில், ரூ 100 கோடியை கடந்துவிட்டதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இந்தியாவில் மட்டும் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளை சேர்த்து ரூ. 72 கோடி வசூலித்துள்ளது.

வெளிநாட்டில் மட்டும் ரூ. 31 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.

வெளிநாட்டில் வசூலித்த விவரங்கள் இங்கே…

  • பிரான்ஸ் : ரூ. 61.8 லட்சம்
  • மலேசியா : ரூ. 6.68 கோடி
  • ஆஸ்திரேலியா : ரூ. 1.22 லட்சம்
  • நியூசிலாந்து : ரூ. 10.06 லட்சம்
  • அமெரிக்கா : ரூ. 9.28 கோடி
  • கனடா : ரூ. 80 லட்சம்
  • யுகே : ரூ. 1.03 கோடி

இவ்வாறாக உலகம் முழுவதும் வசூலித்தாலும், ஒரு முன்னணி நடிகரான சூர்யாவின் படம் ஆந்திராவை விட தமிழகத்தில் குறைவாகவே வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.