“பர்ஸ்ட் லுக்கிலேயே பல்லக்கு தூக்கிய அமெரிக்கா??”


“பர்ஸ்ட் லுக்கிலேயே பல்லக்கு தூக்கிய அமெரிக்கா??”

மாஸ் படத்தின் மிகப்பெரிய பாடத்திற்குப் பிறகு ‘24’ படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார் சூர்யா.

இவர் மூன்று வேடம் ஏற்றிருந்தாலும் படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நித்யா மேனன் ஆகிய இருவர் மட்டுமே நடித்துள்ளனர்.

விக்ரம்குமார் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இது சயின்ஸ் பிக்ஷன் படம் என்பதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை படக்குழுவினர் குறிவைத்துள்ளனர்.

எனவே படத்தை கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு விறுவிறுப்பாக பணியாற்றி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை சினி கேலக்ஸி நிறுவனம் வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

படத்தின் பர்ஸ்ட் லுக்கைத் தவிர வேறு எதுவும் வெளியாக நிலையில் பிரபல நிறுவனம் இதன் உரிமையை வாங்கியுள்ளது ஆச்சர்யம்”.