சூர்யா படத்திற்கு எதிராக களம் இறங்கும் விஜய் ரசிகர்கள்..!


சூர்யா படத்திற்கு எதிராக களம் இறங்கும் விஜய் ரசிகர்கள்..!

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா மூன்று கெட்டப்பில் நடித்துள்ள படம் ’24’. இவரின் ஜோடியாக சமந்தா, நித்யாமேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் நாளை மே 6ஆம் தேதி உலகமெங்கும் 2000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் விஜய் ரசிகர் உருவாக்கிய ‘அதர வெப்போம் தளபதி ரசிகன்டா’ என்ற படத்தை நாளை வெளியுடவுள்ளனர்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் விஜினா என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இவர் விஜய் இளைஞர் மன்றத்தின் முன்னாள் நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் அறிமுக நாயகன் ராகுல், டிவி தொகுப்பாளர் ஐஸ்வர்யா, பாக்யராஜ், பட்டிமன்றம் ராஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

LHR பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் பல விஜய் ரசிகர்கள் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.