சூர்யா ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் விருந்து.!


சூர்யா ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் விருந்து.!

சில ரசிகர்களுக்கு, ஆக்டிங் பிடிக்கலாம்… டான்ஸ் பிடிக்கலாம்… ஸ்டைல் பிடிக்கலாம்… ஆனால் எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தது பாடல்கள்தான்.

அதிலும் ஏஆர் ரஹ்மானின் இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை எனலாம்.

இவரின் இசையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான ‘தள்ளிப் போகாதே’ என்ற பாடல் இணையத்தில் வைரலாகி பரவி, பல சாதனைகளைப் படைத்தது.

பீப் பாடல் விவகாரத்தால் சிக்கிக் கொண்ட சிம்புவுக்கு இப்பாடலின் சாதனை பெரும் ஆறுதலாய் அமைந்தது.

இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் சூர்யா நடித்துள்ள ‘24’ படத்திலிருந்து சிங்கிள் ட்ராக் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.