படம் வரும் முன்பே ஆந்திராவை அசத்திய சூர்யா


படம் வரும் முன்பே ஆந்திராவை அசத்திய சூர்யா

மாஸ்’ படத்தை தொடர்ந்து ‘ஹைக்கூ’ படத்தில் நடித்துள்ளார் சூர்யா. இதனையடுத்து விக்ரம்குமார் இயக்கத்தில் ‘24’ படத்தில் நடித்து வருகிறார். இவருடன் சமந்தா, நித்யா மேனன், சத்யன், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இப்படத்தின் வியாபாரம் தற்போதே ஆந்திராவில் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில் இயக்குனர் விக்ரம்குமார் தமிழில் ‘அலை’, ‘யாவரும் நலம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தெலுங்கில் இவர் இயக்கிய ‘இஷ்க்’, ‘மனம்’ என இரண்டு படங்களும் ஆந்திராவில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ‘மனம்’ படம் இவருக்கு சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்றுத் தந்தது.

எனவே இவர் தற்போது இயக்கிவரும் ‘24’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு அங்கும் உருவாகியுள்ளது. ஏற்கெனவே சூர்யா மற்றும் சமந்தாவுக்கும் தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உள்ளது. இதனால், இப்படத்தை தெலுங்கில் இப்பொழுதே பெரிய தொகைக்கு விற்று விட்டார்களாம். இது ஆந்திர திரையுலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.