ஆந்திராவை கலக்கும் சூர்யா-கார்த்தி… கொண்டாடும் ரசிகர்கள்…!


ஆந்திராவை கலக்கும் சூர்யா-கார்த்தி… கொண்டாடும் ரசிகர்கள்…!

தமிழ் நடிகர்களில் கமல்-ரஜினி படங்களுக்கு தமிழகம் தாண்டி ஆந்திராவிலும் நல்ல மார்கெட் உள்ளது.

தற்போது இந்த வரிசையில் இளம் நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோரது படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

சில நாட்களுக்கு முன்பு வெளியான கார்த்தியின் தோழா படத்திற்கு நல்ல வசூல் கிடைத்தது.

மேலும் படத்தில் நடித்த நாகார்ஜீனாவை விட கார்த்தியின் நடிப்பு பலராலும் பேசப்பட்டது.

இந்நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன் வெளியான சூர்யாவின் 24 படத்திற்கும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

இப்படம் வெளியான 3 நாட்களில் அதாவது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ 17 கோடியை வசூல் செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து சூர்யாவை நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க அழைப்பு விடுத்து வருகிறதாம் டோலிவுட்.