தெறியை நெருங்கிய 24… விஜய்யை முந்துவாரா சூர்யா…?


தெறியை நெருங்கிய 24… விஜய்யை முந்துவாரா சூர்யா…?

கடந்த மாதம் ஏப்ரல் 14ஆம் தேதி விஜய் நடித்த தெறி ரிலீஸ் ஆனது.

சுமார் 70 கோடி ரூபாய் கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் ரூ. 120 கோடிக்கு மேல் வசூல் செய்து தன் சாதனையை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் சூர்யா தன் 2D எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரித்து நடித்துள்ள, 24 படம் வருகிற மே 6ஆம் தேதி வெளியாகிறது.

உலகமெங்கும் கிட்டதட்ட 2000 தியேட்டர்களில் இப்படம் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 65 கோடி என்றும், இதன் புரமோஷன் செலவுகளுக்காக ரூ. 5 கோடி வரை செலவழித்துள்ளதாக தயாரிப்பாளர் தன் சமீபத்திய் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஆக மொத்த இதன் பட்ஜெட்டும் தெறியை போல ரூ.70 கோடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்த 24 படமும் தெறியை போல சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.