நட்சத்திர கிரிக்கெட்… சாம்பியன் ஆன சூர்யாவின் சிங்கம் அணி.!


நட்சத்திர கிரிக்கெட்… சாம்பியன் ஆன சூர்யாவின் சிங்கம் அணி.!

நடிகர் சங்கம் சார்பாக நட்சத்திர கிரிக்கெட் போட்டி இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வந்தது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இப்போட்டி தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமானது.

ரஜினி, கமல் ஆட்டம் தொடங்கும் முன்னரே வந்திருந்து, அனைத்து வீரர்களையும் வாழ்த்தி போட்டியை துவங்கி வைத்தனர்.

இதன் இறுதி ஆட்டத்தில் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் மற்றும் ஜீவாவின் தஞ்சை வாரியர்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற சென்னை சிங்கம்ஸ் அணி பீல்டிங் செய்ய முடிவு செய்தது. எனவே, தஞ்சை வாரியர்ஸ் அணி பேட்டிங் செய்தது.

84 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய சூர்யா அணி ஜீவா அணியை மிக எளிதாக வென்று கோப்பையை தட்டிச் சென்றது.

மேன் ஆப் தி சீரிஸ் பரிசை நடிகர் விக்ராந்த் பெற்றார்.