குட்டீஸ் ரசிகர்களுக்காக சூர்யா தரும் சூப்பர் கிப்ட்..!


குட்டீஸ் ரசிகர்களுக்காக சூர்யா தரும் சூப்பர் கிப்ட்..!

விக்ரம் கே குமார் இயக்கத்தில் சூர்யா மிகப்பிரம்மண்டமாக தயாரித்து நடித்திருக்கும் படம் 24.

கடந்த மே 6ஆம் தேதி வெளியான இப்படத்தில் சூர்யா 3 வேடங்களில் நடித்திருந்தார். இவருடைய கேரக்டர் போலவே, நாம் கையில் கட்டும் வாட்ச் கேரக்டரும் நம் கவனத்தை ஈர்த்தது.

இந்த டைம் மிஷின் வாட்ச் முக்கியமாக குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

எனவே படம் பார்க்க வரும் குழந்தைகளுக்கு அன்பு பரிசாக மேஜிக் வாட்ச் ஒன்றை இலவசமாக வழங்க திட்டமிட்டு இருக்கிறாராம் சூர்யா.

அதன்படி, இன்றுமுதல் 24 படத்தை காண வரும் 8 வயதுக்குள்ள குழந்தைகளுக்கு இலவசமாக வாட்ச் வழங்கப்பட்டு வருகிறது.