கபாலி டீசர்… கடைசி நொடியில் சர்ப்ரைஸ் தரும் ரஜினி..!


கபாலி டீசர்… கடைசி நொடியில் சர்ப்ரைஸ் தரும் ரஜினி..!

கபாலி படத்திற்காக ரஜினி தன் டப்பிங்கை முடித்தவுடன், கபாலி டீசரின் ரிலீஸ் தேதி உறுதியானது. மே 1ஆம் தேதி டீசர் வெளியாகவுள்ளது.

இதன் டீசர் வெளியாக இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில் இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் டீஸர் பற்றி இப்படத்தின் எடிட்டிர் பிரவீன் கூறியதாவது-..

“கபாலி கேரக்டரை வெளிப்படுத்தும் விதமாக இந்த டீசர் உருவாகி வருகிறது.

இதில் வரும் ரஜினியின் பன்ச் டயலாக்கை ரசிகர்கள் பெரியளவில் கொண்டாடுவார்கள்.

மேலும் இந்த டீசரின் இறுதியில் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது” என்றார்.

இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறியதாவது…

“கபாலி படத்தில் நானும் இருக்கிறேன் என்பதில் பெருமையாக இருக்கிறது. ரஜினியின் மேஜிக் என்றும் கொண்டாடப்படும்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.