ரசிகர்களுக்காக ‘புலி’ படத்தில் விஜய்யின் சர்ப்ரைஸ்!


ரசிகர்களுக்காக ‘புலி’ படத்தில் விஜய்யின் சர்ப்ரைஸ்!

நடிகர் விஜய்யின் படங்கள் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இருக்கும். இருந்தபோதிலும் தன் ரசிகர்களுக்காக தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் பாடல், நடனம், சண்டை, பன்ச் வசனம் போன்றவற்றில் தனி கவனம் செலுத்தி வருபவர் விஜய். இந்த வழக்கம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ள ‘புலி’ படம் வரை தொடர்ந்து வருகிறது.

இப்படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், நந்திதா, ஸ்ரீதேவி,  பிரபு, சுதீப், சத்யன், கருணாஸ், தம்பி ராமையா, விஜயகுமார், ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்க நட்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் விஜய்யின் ஓப்பனிங் ஸாங் ஒன்றுக்கு மட்டும் 100 நடனக் கலைஞர்கள் பங்கேற்க 5 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாம். இதற்காக பிரம்மாண்ட செட் ஒன்றை உருவாக்கினாராம் ஆர்ட் டைரக்டர் முத்துராஜ். தற்போது படத்தின் பாடலை போலவே படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியும் மிகப்பிரம்மாண்ட முறையில் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

க்ளைமாக்ஸ் காட்சியில் விஜய் 1000 பேருடன் மோதும் சண்டை காட்சி எடுக்கப்பட்டுள்ளது. அனல் பறக்கும் இந்த சண்டைக் காட்சியை ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் சாங் லீன் மிகவும் பிரம்மாண்டமாக எடுத்துள்ளார். இவை இரண்டும் பெரிய அளவில் பேசப்படும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த சர்ப்ரைஸ் செய்திகளை தொடர்ந்து விஜய்யின் ஒரு கேரக்டர் இதுவரை ஏற்காத சர்ப்ரைஸான கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய் பிறந்த நாளிலும், விநாயகர் சதுர்த்தியன்று படத்தை வெளியிடவும் இருக்கின்றனர்.