மாற்றம் முன்னேற்றம் விஜய்! சூப்பர் ஜி! சூப்பர் ஜி!


மாற்றம் முன்னேற்றம் விஜய்! சூப்பர் ஜி! சூப்பர் ஜி!

அட்லி இயக்கும் படத்தைத் தொடர்ந்து பரதன் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். இச்செய்தி வெளியான முதல் திரையுலகில் ஒரு பட்டிமன்றமே நடந்து வருகிறது. விஜய் ஏன் இப்படியொரு முடிவை எடுத்தார்?

பல ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர்கள் விஜய்க்காக காத்திருக்கும்போது ‘அழகிய தமிழ் மகன்’ என வெற்றி பெறாத பட இயக்குனருக்கு ஏன் வாய்ப்பளித்தார்? என கேள்விகள் வந்த வண்ணம் உள்ளன.

சில வருடங்களுக்கு முன்பு விஜய்யை சந்தித்த இயக்குனர் பரதன் ஒரு கதையைக் கூறியுள்ளார். ஆனால் அப்போது பரதன் கூறிய கதையை தேர்ந்தெடுக்காமல் மற்றொரு கதையை சொல்லி அதை படமாக்க விஜய் கூறினாராம். அந்தப்படம்தான் ‘அழகிய தமிழ்மகன்’.

ஆனால் அப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பதால் பரதனுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே தன்னால் பரதனுக்கு இப்படியொரு நிலைமை வந்ததையடுத்து அவருக்காக பெருந்தன்மையோடு இப்படியொரு முடிவை எடுத்துள்ளாராம் இளையதளபதி.

மேலும் தற்போது பரதன் கூறிய கதை பெரும் நம்பிக்கை அளித்துள்ளதால் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சமீபமாக விஜய் ரொம்பவே மாறிவருகிறார். மாற்றம் முன்னேற்றம் விஜய்! சூப்பர் ஜி! சூப்பர் ஜி!