சூர்யாவின் ஹைக்கூ பற்றிய புதிய தகவல்கள்


சூர்யாவின் ஹைக்கூ பற்றிய புதிய தகவல்கள்

‘மாஸ்’ படத்தை தொடர்ந்து தற்போது விக்ரம் குமார் இயக்கத்தில் ‘24’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதனிடையில் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘ஹைக்கூ’ படத்தில் நடித்தார் சூர்யா. இவருடன் கார்த்திக் குமார், பிந்துமாதவி, அமலாபால், முனீஷ்காந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். சூர்யா மற்றும் அமலாபால் இருவரும் 2 குழந்தைகளின் பெற்றோர்களாக நடித்துள்ளனர். அரோல் கரோலி இசையமைக்க பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரித்திருக்கிறார் சூர்யா.

இப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் இப்படத்தின் தகவல்களை சற்றுமுன் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ‘ஹைக்கூ’ படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலரை இம்மாதம் இறுதியில் வெளியிட இருப்பதாகவும் தேதியை பின்னர் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். படத்தின் வெளியீட்டு தேதியை இன்னும் நான்கு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

எக்ஸ்ட்ரா டிப்ஸ் : மேலும் இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் அவருடன் பணியாற்றுவது மிகவும் எளிதானது என்றும், ‘இது நம்ம ஆளு’, ‘ஹைக்கூ’, தற்போது இயக்கும் பெயரிடப்படாட விஷால் படங்களில் அவருடன் பணியாற்றியது மறக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.