தனது இரண்டாவது மகனுக்கும் ஆதரவு கேட்கும் டி.ராஜேந்தர்..!


தனது இரண்டாவது மகனுக்கும் ஆதரவு கேட்கும் டி.ராஜேந்தர்..!

சிம்பு நடித்து, இவரது தம்பி குறளரசன் இசையமைத்துள்ள ‘இது நம்ம ஆளு’. பாடத்தின் பாடல்களை நேற்று சிம்பு பிறந்த நாளில் வெளியிட்டனர். இவ்விழாவில் டி.ராஜேந்தர், குறளரசன், பி.டி.செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இசையமைப்பாளர் குறளரசன் பேசியதாவது…

‘‘என் குடும்பத்திற்கு முதலில் நன்றி. என்னுடைய முதல் இசையே என் அண்ணன் படத்திற்கு என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நிறைய டியூன்களை ரெடி செய்து வைத்திருந்தேன். அதில் சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து மெட்டு அமைத்திருக்கிறேன்.

இதில் நானும் ஒரு பாடலை பாடியிருக்கிறேன். மேலும் யுவன் சங்கர் ராஜா, ஸ்ருதிஹாசன், சிம்பு, டி.ராஜேந்தர் இப்படி எல்லாரும் பாடல்களை பாடியிருக்கிறார்கள்.

நான் இசையமைக்க லேட் செய்வதாக புகார்கள் வந்தன. முதல் படம் நன்றாக வரவேண்டும் என்பதால் அப்படி ஆனது. எனவே, டைரக்டர் பாண்டிராஜ்க்கு நன்றியை கூறிக்கொள்கிறேன்.” என்றார்.

டி.ராஜேந்தர் பேசியதாவது…

“சிம்புவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்தேன். அப்போதும், அவர் ஹீரோவான பிறகும் நீங்கள் ஆதரவளித்தீர்கள். இப்போது என் மகன் குறளரசனுக்கும் நீங்கள் ஆதரவளிக்க வேண்டும்.

மார்ச் மாதத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை ரிலீஸ் செய்கிறது. அதற்குள் இரண்டு பாடல்களை படமாக்க இருக்கிறோம். ஒரு பாடலில் ஆண்ட்ரியா நடிக்கிறார். மற்றொரு பாடல் மிக பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது’ என்று பேசினார்.