டி.ஆர்-க்கே ‘டண்டனக்கா’? கோர்ட் வாசலில் நிற்கும் ‘ரோமியோ ஜூலியட்’


டி.ஆர்-க்கே ‘டண்டனக்கா’? கோர்ட் வாசலில் நிற்கும் ‘ரோமியோ ஜூலியட்’

அறிமுக இயக்குநர் லக்‌ஷ்மன் இயக்கத்தில் ஜெயம் ரவி, ஹன்சிகா, பூனம் பஜ்வா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ‘ரோமியோ ஜூலியட்’. இப்படத்தில் டி.ராஜேந்தரின் ரசிகராக நடித்து இருக்கிறாராம் ஜெயம்ரவி. எனவே, டி.ராஜேந்தரை கௌரவிக்கும் விதமாக (அவிங்க சொன்னதுதான்) அவர் அடிக்கடி பயன்படுத்தும் ‘டண்டனக்கா’ என்ற வார்த்தையை பயன்படுத்தி ஒரு பாடலை அண்மையில் வெளியிட்டனர்.  இமான் இசையமைக்க அந்தப் பாடலை அனிருத் பாடியிருந்தார். பாடலும் எதிர்பாரா வகையில் செம ஹிட்டடித்துள்ளது.

“ டண்டனக்கா
எங்க தல எங்க தல டீ ஆரு
சென்டிமென்ட்டுல தார்மாறு
மைதிலி என்னை காதலி”ன்னாரு   என்று தொடங்கும் இந்தப் பாடல் வெளியானதுதான் தாமதம். இணையத்தில் பாடல் நன்றாகவே ‘டண்டனக்கா’ போட்டு வருகிறது. இந்த பாடல் வெளியான நாளில் இருந்தே ஏகப்பட்ட மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டார் டி.ராஜேந்தர். இதனால் ஜெயம் ரவி, இமான் மற்றும் அனிருத் மீது செம கடுப்பில் இருக்கிறாராம் டி.ஆர்.

ஆனால் படத்தின் நாயகனோ… ‘படத்தில் நான் டி.ஆரின் ரசிகனா நடித்திருக்கிறேன். அவரை இழிவுபடுத்துவதை போல படத்தில் ஒரு காட்சி கூட வைக்கவில்லை. இந்த பாடலை ரீமிக்ஸ் செய்து டிஆர் அவர்களின் புகழை நற்பெயரையும் யாரும் கெடுக்க வேண்டாம்’ என்று ஜெயம் ரவி அறிக்கை கூட விட்டு பார்த்தார். இருந்தபோதிலும், இணையதள குறும்பர்கள் இன்னும் விட்டபாடில்லை.

இதனை கண்டு கோபமான டி.ஆர். அந்தப் பாட்டுக்கு ஒரு பெரிய ‘டண்டனக்கா’ போட்டு விட்டார். ஆம். அந்த பாடலுக்கு தடை கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் டி.ஆர். இனி என்ன செய்வது என்று தெரியாமல் புரியாமல் திண்டாடி வருகிறது படக்குழு. இனி கோர்ட் வாசலில் நிற்க வேண்டியதுதான் இந்த ரோமியோ ஜுலியட்.