‘விஜய்யை பாராட்டினேன்… காயப்படுத்திவிட்டார்கள்…’ டிஆர் அதிரடி பேச்சு


‘விஜய்யை பாராட்டினேன்… காயப்படுத்திவிட்டார்கள்…’ டிஆர் அதிரடி பேச்சு

‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ படத்தை தொடர்ந்து ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ள படம் ‘போக்கிரிராஜா’ . ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். தயாரிப்பு பி.டி.செல்வகுமார்.

இமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களில் ஒன்றான ‘அத்துவுட்டா’ என்ற சிங்கிள் ட்ராக் பாடலை டி.ராஜேந்தர் வெளியிட எஸ்.ஏ.சந்திரசேகரன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் டி.ராஜேந்தர் பேசியதாவது…

“ஜீவா, சிபிராஜ் இருவருமே நல்ல பிள்ளைகள். காரணம் அவர்களின் அப்பாக்களை எனக்குப் பிடிக்கும். ஹன்சிகா ஒரு நல்ல நடிகை. எனக்காக ‘வாலு’ பட ஒரு பாடலில் சம்பளம் வாங்காமல் நடித்தார். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

விஜய்யின் ‘புலி’ பட இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு அதிகமாக சினிமா விழாக்களில் நான் கலந்து கொள்ளவில்லை.

அதில் நான் விஜய்யை பாராட்டினேன். பின்னர் அடுக்கி பேசி புலியை வர்ணித்தேன். பலர் பாராட்டினாலும் சிலர் மிகவும் காயப்படுத்தி விட்டார்கள். டிவி நிகழ்ச்சிகளில் கூட விமர்சித்தார்கள்.

‘வாலு’ படப் பிரச்சினையின் போது விஜய்யும் பிடி செல்வகுமாரும் உதவினார்கள். நட்புக்கு உதவுவது தவறா? இந்த சினிமாவில் நன்றி மறப்பவர்கள் அதிகம். ஆனால் நான் அப்படியில்லை.” என்றார்.

எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசியதாவது…

“செல்வகுமாரின் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் கவனிக்கிறேன். எங்கள் வளர்ச்சியில் அவருக்கு பெரும் பங்கு உண்டு.

டி.ராஜேந்தர் போராட்ட குணம் உள்ளவர். நானும் அப்படித்தான். ‘புலி’ பட ரிலீஸின்போது நிறைய சிரமங்கள் வந்தது. நடிகர் ஜீவா ஆறுதலாக இருந்தார்.” என்றார்.

சிபிராஜ் பேசியதாவது…

இதன் சூட்டிங் ஒரு சுற்றுலா அனுபவத்தை கொடுத்தது. ஜீவாவும் நானும் நல்ல நண்பர்களாகி விட்டோம்” என்றார்.

ஜீவா பேசியதாவது…

“இது என்னுடைய 25வது படம். பர்ஸ்ட் சீன் முதல் க்ளைமாக்ஸ் வரை படத்தில் காமெடி இருக்கும்” என்றார்.