இளைய தளபதி விஜய்க்கு டி.ராஜேந்தர் செய்த கைமாறு..!


இளைய தளபதி விஜய்க்கு டி.ராஜேந்தர் செய்த கைமாறு..!

ஜீவா, ஹன்சிகா, சிபிராஜ் உள்ளிட்டோர் நடித்த போக்கிரிராஜா படத்தை ராம்பிரகாஷ்ராயப்பா இயக்கியிருக்கிறார். இப்படம் நாளை மார்ச் 4 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் பிரச்சினை எழுந்தது.

இப்படத்தை தயாரித்திருக்கும் பி.டி.செல்வகுமார்தான் விஜய்யின் புலி படத்தையும் தயாரித்திருந்தார். புலியால் நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள் போக்கிரி ராஜாவுக்கு தடை விதித்தனர்.

எனவே, இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இடையே பலகட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் கலந்துக் கொண்ட டி.ராஜேந்தர் கூறியதாவது….

“தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் நல்ல நண்பர். எங்கள் வாலு படத்திற்கு பிரச்சினை வந்தபோது உதவினார். எனக்கு உறுதுணையாக இருந்தார்.

கலையாக இருந்த சினிமாவை சிலர் தற்போது வியாபாரமாக்கி விட்டார்கள். பிரச்சினைகளை உண்டாக்கி அதில் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள். படத்தை தயாரிப்பதை விட ரிலீஸ் செய்ய போராட வேண்டியுள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்தில் ‘போக்கிரி ராஜா’ பிரச்சனையை பேசி தீர்த்துவிட்டோம். எனவே, மார்ச் 4ம் தேதி படம் வெளியாகும்” என உறுதியாக தெரிவித்தார்.

சிம்பு நடித்த ‘வாலு’ படத்தின் வெளியீட்டின் போது விஜய் உதவிசெய்து படத்தை வெளியிட உதவினார்.

தற்போது விஜய்யின் புலி படத்தால் போக்கிரி ராஜாவுக்கு எழுந்த பிரச்சினையை டி.ராஜேந்தர் முடித்து கொடுத்துள்ளது, விஜய்க்கு டி.ஆர் செய்த கைமாறாக திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.