‘தலைக்கனம் இல்லாத தளபதி விஜய்’ – டி.ஆர். புகழாரம்!


‘தலைக்கனம் இல்லாத தளபதி விஜய்’ – டி.ஆர். புகழாரம்!

விஜய் நடித்த ‘புலி’ படத்தில் நிறைய ஹைட்லைட்ஸ் உள்ளது என்றாலும், படத்தின் இசை வெளியீடு விழாவிலும் நிறைய ஹைலைட்டான விஷயங்கள் நடந்துள்ளது. இதில் விஜய்யின் பேச்சு இதுவரை இல்லாத அளவு பரபரப்பை உண்டாக்கியுள்ளது. தன்னுடைய கோபம், அன்பு என அனைத்தையும் பகிர்ந்தார் விஜய்.

இவரைப்போலவே விழாவில் கலந்து கொண்ட டி. ராஜேந்தரும் பல உணர்வுப்பூர்வமான விஷயங்களை பகிர்ந்தார். இவரின் பேச்சு விஜய்யை ஆனந்த கண்ணீரில் நனைய வைத்துவிட்டது. விழாவில் இயக்குனர் டி.ராஜேந்தர் பேசியதாவது…

‘‘இளையதளபதி விஜய் ஓர் உண்மையான தமிழன். என்னுடைய மகன் சிம்பு வேறொரு நடிகரின் ரசிகன் என தெரிந்தும் தனது சகோதரனாக நினைத்து நாங்கள் கேட்காமலே ‘வாலு’ படம் வெளியீட்டுக்கு உதவி செய்துள்ளார். தம்பி விஜய்யின் உதவியை நான் மறக்கவே மாட்டேன்.

தம்பி விஜய் உன்னிடம் இல்லை தலைக்கனம்… நீ நடிச்ச படம் பேரு கத்தி, இதுக்குத்தான் ரசிகர்கள் இருக்காங்க உன்ன சுத்தி… நீ பேசமாட்ட வசனங்கள் கத்தி.. என தனது வழக்கமான பன்ச் டயலாக்குகளை சேர்த்துக்கொண்டு பேசிக் கொண்டே இருந்தார்.

பத்து நிமிடங்களில் டி.ஆர். பேச்சில் அனல் தெறிக்க ஆரம்பித்தது. உடனே நேராக மேடையேறிய விஜய், டி.ராஜேந்தரை கட்டி அணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதன்பின்னரும் டி.ராஜேந்தர் தொடர்ந்து விஜய்யை பற்றி புகழ்ந்துக் கொண்டே இருந்தார்.

அதன்பின்னர் அனைத்து சிறப்பு விருந்தினர்களும் படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த விழாவில் நடிகர் விஜய், நடிகைகள் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, நந்திதா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், இயக்குனர் சிம்பு தேவன் உள்ளிட்ட படக்குழுவினரும், சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன், டி.ராஜேந்தர், தரணி, எஸ்.ஜே.சூர்யா, நடிகர்கள் ஜீவா, தம்பி ராமையா, விஜய்சேதுபதி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.