அமிதாப்புடன் இணையும் அஜித், தனுஷ் பட நாயகி..!


அமிதாப்புடன் இணையும் அஜித், தனுஷ் பட நாயகி..!

ஆறு தேசிய விருதுகளை அசாலட்டாக அள்ளிக் குவித்த படம் ‘ஆடுகளம்’. இதில் தனுஷின் ஜோடியாக அறிமுகமானவர் டாப்சி. பின்னர் அஜித்தின் ஆரம்பம், வை ராஜா வை ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

தற்போது செல்வராகவன் இயக்கும் கான் படத்தில் சிம்புவுடன் நடித்து வந்தார். ஆனால், சிலகாரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறாமல் உள்ளது.

இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்புடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் டாப்சி. அமிதாப் பச்சனுடன் நடிப்பதால் கதையை கூட கேட்காமல் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

இது மட்டுமில்லாமல் இப்படத்தில் நடிப்பதற்கு இன்னொரு முக்கிய காரணத்தையும் கூறுகிறாராம். இவர் பஞ்சாபி பெண்ணாக இருந்தாலும் இவர் வளர்ந்தது எல்லாம் டெல்லியில்தானாம். எனவே, இப்படத்தில் டெல்லி பெண்ணாக நடிப்பதால் கூடுதல் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை சூஜித் சிர்கார் தயாரிக்க அனிருத்தா ராய் சௌத்ரி இயக்கவிருக்கிறார்.