த்ரிஷா இல்லனா டாப்ஸி; சிம்ரன் இல்லனா சோனியா!


த்ரிஷா இல்லனா டாப்ஸி; சிம்ரன் இல்லனா சோனியா!

‘வாயை மூடி பேசவும்’, ‘காவியத்தலைவன்’ ஆகிய படங்களை தொடர்ந்து வருண்மணியன் தயாரிக்கும் புதிய படத்தில் ஜெய் நாயகனாக நடிக்கவிருக்கிறார். திரு இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக இருந்தது.

இவர்களுடன் த்ரிஷாவின் அக்காவாக சிம்ரனும் மற்றும் ஜெய்யின் அண்ணனாக பிரபுதேவாவும் நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் சில காரணங்களால் த்ரிஷா இப்படத்திலிருந்து விலகவே டாப்ஸி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.  த்ரிஷாவை தொடர்ந்து சிம்ரனும் விலகி விட்டார். எனவே சிம்ரனுக்கு பதிலாக சோனியா அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளர்.

தற்போது த்ரிஷா மற்றும் சிம்ரன் விலகியதையடுத்து பிரபுதேவாவும் இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்கவிருக்கிறார். என்னங்க இவ்ளோ படிச்சும் புரியலையா? சரி உங்களுக்கு புரியுற போல சொல்றோம்.

த்ரிஷாவுக்கு பதிலாக டாப்ஸி, சிம்ரனுக்கு பதிலாக சோனியா மற்றும் பிரபுதேவாவுக்கு பதிலாக சமுத்திரக்கனி நடிக்கவிருக்கின்றனர். படத்தின் நாயகன் ஜெய்யை தவிர மற்ற முக்கிய நட்சத்திரங்கள் அனைவரும் மாறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதெல்லாம் சரி! கதை அப்படியேதான் இருக்கா? இல்ல அதையும்…